ஆஹா...அந்த நாட்களின் சோவியத் புத்தகங்கள்! ஏழு நிறப்பூ, தார் பூசிய வைக்கோல் கிடா, முதலை விழுங்கிய சூரியன்...போன்ற அருமையான கதைகளைப் படித்து லயித்திருக்கிறீர்களா? குழந்தைகளுக்குச் சொல்லவும், பெரியவர்கள் படித்து (அல்லது நினைத்து) ரசிக்கவும் இன்றைக்கும் அலுக்காத படைப்புகள் அவை.
துரதிருஷ்டவசமாக, சோவியத் யூனியன் அழிவுடன் அவைகளும் நம் நாட்டிலிருந்து மறைந்துவிட்டன. இருந்தாலும் என்ன, அவற்றைப் படித்த நாம் இணையத்தில் அவற்றுக்கு உயிர் கொடுப்போம் வாருங்கள். நான் எனக்குத் தெரிந்த கதைகளைப் பதிக்கிறேன். உங்களிடம் புத்தகமாகவோ அல்லது ஞாபகமாகவோ இருக்கும் கதைகளை அனுப்பி வையுங்களேன்--இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். டெக்ஸ்ட், pdf, மென்புத்தகம் என எந்த வடிவத்திலும் இருக்கலாம். இப்பதிவில் இணைய விரும்புபவர்களையும் வரவேற்கிறேன்.
உங்கள் ஞாபகத்திற்காக சில கதைகளின் பெயர்கள்/key words இங்கே:
1. ஏழு நிறப்பூ
2. தார் பூசிய வைக்கோல் கிடா
3. கசகசா பூரி
4. வலைஞனும் மீனும்
5. 'சடப்புட சடப்புட மரநாயே சொன்ன பேச்சைக் கேளு'
6. மாஷாவும் கரடியும்
7. பொய் பிரட்டுச் சின்னாடு
8. குறும்பன் (நாவல்)
இன்னும் நிறைய... இதில் முதலில் வலைஞனும் மீனும் கதையைப் பதியலாம் என்றிருக்கிறேன்.
வாசகர்கள் சோவியத் புத்தகங்கள் பற்றிய நினைவுகள், அனுபவங்கள், இவை தற்போது புத்தகமாக அல்லது வலையில் கிடைக்கும் விவரங்கள், ஆசிரியர்களைப் பற்றிய தகவல்கள், உங்களுக்கு மறந்துவிட்ட, இப்பொழுது ஞாபகப் படுத்திக்கொள்ள விரும்பும் கதைகள் என எதைப்பற்றி வேண்டுமானாலும் பின்னூட்டமிடுங்கள்...தேவையானவற்றை இடுகையாகவே பதிகிறேன்.
முதலில் நான் கேட்க விரும்புவது இதுதான்: 'ஏழு நிறப்பூ' வில் வரும் சிறுமியின் (மற்றும் சிறுவன்) பெயர் மற்றும் அவள் கேட்கும் ஏழு வரங்கள் என்ன? எனக்கு நான்கு வரங்களே நினைவுள்ளன: வளைய பிஸ்கோத்து, வட துருவம் செல்வது, திரும்புவது மற்றும் நடக்க இயலாத சிறுவனின் கால்களை சரி செய்வது. அப்புறம் அந்த 'பறப்பாய் பறப்பாய் பூ இதழே' பாட்டு முழுமையாகத் தேவை!
ஒரு குறிப்பு: குழந்தைகளுக்கான கதைகளிலேயே கவனம் செலுத்த எண்ணம்...பிரபல இலக்கியவாதிகளான செகாவ், டால்ஸ்டாய், தாஸ்தாயவ்ஸ்கி போன்றவர்களைப் பற்றி விவாதிக்க வேறு இடங்கள் நிறைய உள்ளன.
Sunday, 2 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஏழு நிறப்பூ ரொம்ப நல்ல கதைங்க.நீங்க குறிப்பிட்டுருக்கர மத்த கதைகள்ல Masha and the BEar தவிர வேறு ஒண்ணும் நியாபகம் இல்லை. அந்த பொண்ணு பேரு நடாஷா??ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரியா தெரியல இன்னிக்கு பூரா மண்ண்டை குடச்சல் தான். முயற்ச்சி பண்ணரேன். ரஷ்ய கதைகள் அருமையா இருக்கும்......ஹ்ம்ம்.!!
நன்றி ராதா ஸ்ரீராம். நந்திதா தாஸ் சிறுவயதில் ரஷ்யக் தைகளை விரும்பிப் படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுமி பேர் கூட வேண்டாம். மீதி மூணு வரங்கள் என்னன்னு சொன்னா அந்தக்கதையைப் பதிஞ்சிடுவேன்! மாஷாக் குட்டி கதையில் 'பார்க்கிறேன், பார்க்கிறேன், ஓக் மரத்தின் மீதிருந்து பார்க்கிறேன்' என்ற வரிகள் என்றைக்கும் மறக்காது. எல்லரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா முடிஞ்ச அளவு நினைவுக்குக் கொண்டுவந்து பதிந்து வைத்து விடுவோம். மற்றபடி இந்தப் பதிவிற்கு முதல் மறுமொழி வந்ததில் ரொம்ப சந்தோஷம். வந்தனம்!
Sorry could not type in Tamil because of font issue.
Saravanan,
Its one of the story which I cherished very much during my young ages. The scene where she is in the middle of the polar bears is still fresh in my mind.
Parappai parappai poo ithaze, parappai therkilirunthu vadakke... :-)) Thats all I can recollect now.
Eager to know if somebody can reproduce the story with the pictures as well.
Radha Sriram,
//இன்னிக்கு பூரா மண்ண்டை குடச்சல் தான். //
Same blood :-))
ரொம்ப நன்றி ஸ்ரீதர் நாராயணன்.
//The scene where she is in the middle of the polar bears is still fresh in my mind.//
எனக்கும்! அப்புறம், வடதுருவம் சென்றுவந்ததற்கு ஆதாரமாக, மூக்கில் தொங்கும் பனித்துகளைக் காட்ட, அப்போதும் பசங்கள் நம்பாதபோது பாவமாக இருக்கும்...
அந்த பெண் பேர் 'ஷேன்யா'ங்க சரவணன் தப்பா நடாஷான்னு எழுதிட்டேன்.!!
'ஷேன்யா'!! ஆமாம், ரொம்ப சரி! அப்படியே மீதி மூணு வரத்தையும் கண்டுபிடுச்சு சொல்லிடுங்களேன். ப்ளீஸ்!
சரவணன் eureka, eureka!!! இதோ உங்களுக்காக.......
http://home.freeuk.com/russica4/books/flower/7.html
இனிமே தமிழ் படுத்த வேண்டியது உங்க பொறுப்பு..:):)
வாவ்! உங்களுக்கு எப்படி நன்றி சொலறதுன்னே தெரியலை!
//இனிமே தமிழ் படுத்த வேண்டியது உங்க பொறுப்பு..:):)//
கண்டிப்பா! முதல்ல நான் ஒரு வாட்டி படிச்சு ரசிச்சுடறேன். எத்தனை வருஷம் ஆச்சு அதைப் படிச்சு/ அம்மாகிட்ட கேட்டு!
its give surprise for me to read again the soviet stories... in my childhood i have read a book named
'veliyattuppilligal"
i cant forget the stories..
the names like meesha,golya,masha,tholya....
in a simple narrative style the author was explained the mentality of all the children...
i still have the book and reading again and again and thinkind of my childhood days...
thanks for the publisher to diva chance for me to rejuvenate my childhood.....
பொக்கிஷம்போல பார்த்து பார்த்து சேர்த்துவைத்தகதைகள்... வாளையின் சட்டம் எந்தன் இஷ்டம்.. .. இன்னும் நிறைய அம்மாவீட்டில் இப்பவும் மரபீரோவில் இருக்கிறது விடுமுறையில் இப்ப போனாலும் எடுத்து வாசிப்போம் ..சின்னபொண்ணு போல இதை படிக்கிறாளே என்று யார் பார்த்தாலும் கவலை இல்லை..
( இன்று தான் இந்த பதிவைப்பற்றி விகடனில் படித்தேன் )
i very much glad to appreciate your work. i also a lover of soviet literature
First of all, i wish to thank you for your tremendous work.I really feel nostalgic after reading 'meeshka samaitha pongal'.I have read that story when i was syudying fourth standard.I was a great fan of soviet literature and especially nicolai nosav.I would like you to collect his other stories like 'tholyavin vinothangal','veetilum veliyilum'and many more.sorry that i could not type in tamil.
நன்றி ஜெயதேவி. நீங்கள் விரும்பினால் மீஷ்கா... கதை உள்ள தொகுப்பு முழுவதையும் ஆங்கிலத்தில் வேர்ட் கோப்புகளாக உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.
எனக்கு எங்கிருந்து கிடைத்தது என நினைவில்லை.
yezhu nirappu is a sweet story. i too read this in my childhood. now i feel like a child after reading this. thank you for the translation. i read this this story when i affected by typhoid. in hospital as a patient i read this. it recollects my memories. thank you thank you thank you
yezhu nirappu is a nice soviet story. i too read this in my childhood(3rd std) when i was admitted in hospital, affected by typhoid. i makes me recollect my memories. thank you for the wonderful work. thank you, thank you, thank u.
Sarala Natarajan: Thanks so much for your appreciation. Credit goes to Radha Sriram who searched for and found the English version of the story we all cherished in Tamil as children. I'm glad to know that it cheered you up at a tough time. Hope you get well soon. Thanks!
Post a Comment