Thursday 6 March 2008

பொய் பிரட்டுச் சின்னாடு

முன்னொரு காலத்தில் வயதான கிழவனார் ஒருவர் தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு ஆடு வளர்க்க ஆரம்பித்தார். தன் பிள்ளைகளில் மூத்தவனை அழைத்து, ஆட்டை மேய்த்துவரும்படி சொன்னார்.
அவனும் அந்த ஆட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். காடு மேடல்லாம் சுற்றி, ஆடு நன்றாக புல்லும், இழைதளைகளும் சாப்பிடும்படி செய்தான். மாலைவரை ஆட்டை மேய்த்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டி வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் கிழவர் அந்த ஆட்டைப் பார்த்து, 'என்ன, திருப்தியாக மேய்ந்தாயா?' என்று கேட்டார். அந்த ஆடோ, 'இல்லை தாத்தா. ஒரே ஒரு இலைதான் தின்றேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்.' என்றது. உடனே கிழவனாருக்குத் தன் மூத்த மகன் மேல் கடும் கோபம் வந்துவிட்டது. 'போடா வெளியே' என்று அவனை அடித்து விரட்டிவிட்டார்.
மறுநாள் தன் இளைய மகனை அழைத்து ஆட்டை மேய்த்து வரச் சொன்னார். அவனும் மாலை வரை ஆட்டை நிறையத்தீனி உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று நன்றாக மேய்த்தான். மாலையானதும், வீடு திரும்பினான்.
கிழவர் அன்றும் ஆட்டைப் பார்த்து 'திருப்தியாக மேய்ந்தாயா?' என்று கேட்டார். ஆடு திரும்பவும் முதல்நாள் சொன்னது மாதிரி 'இல்லை தாத்தா. ஒரே ஒரு இலைதான் உண்டேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்' என்று பொய் சொன்னது.சினமடந்த கிழவனார், தன் இளைய மகனையும் அடித்து விரட்டிவிட்டார். அடுத்தநாள் தானே ஆட்டை ஓட்டிச் சென்றார். ரொம்பக்கவனமாக அந்த ஆட்டை, நல்ல மேய்ச்சல் நிலங்களாகப் பார்த்துப் பார்த்து மேய்த்தார். நல்ல சுனைக்கு அழைத்துச் சென்று வேண்டிய அளவு தண்ணீர் அருந்தும்படி செய்தார். வீடுவந்து சேர்ந்ததும், 'இன்றைக்காவது நன்றாகச் சாப்பிட்டாயா?' என்று ஆட்டிடம் கேட்டார். அந்தப் பொல்லாத ஆடோ அன்றும் வழக்கம் போல, 'இல்லவே இல்லை. ஓரே ஒரு இலைதான் தின்றேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்' என்றது.
அவ்வளவுதான். கிழவருக்கு வந்ததே கோபம்! 'என்னிடமே பொய் சொல்கிறாயா? ஓடிப்போ இங்கிருந்து, பொய் பிரட்டுச் சின்னாடே' என்று விரட்டி விட்டார்.
**கதை இன்னும் நிறைய மீதி இருக்கிறது. அந்த ஆடு தான் செல்லும் வழியில் ஒரு நரியோடு (?) சேர்ந்து கொள்ள, இரண்டும் சேர்ந்து தந்திரமாக ஒரு ஓநாயிடமிருந்து தப்பிப்பதாகச் செல்லும். உறுதி செய்துகொண்டு தொடர்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருந்தால், நினைவுபடுத்துங்கள்--மறுமொழி மூலமாக.**

5 comments:

சென்ஷி said...

நல்ல கதை.. முடிவையும் எதிர்ப்பார்க்கின்றேன்.. தொடருங்கள் :))

ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி

சென்ஷி said...

தயவு செய்து பின்னூட்டபெட்டி தனியே பாப் அப் விண்டோவில் திறப்பதிலிருந்து விடுதலை கொடுங்கள். பின்னூட்டமிட சற்று சிரமமாக இருக்கிறது :((

ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி

சரவணன் said...

நனறி சென்ஷி. முடிவு விரைவில்! அப்புறம் பாப் அப் விண்டோவில் திறப்பதிலிருந்து விடுதலை கொடுத்தாச்சு... மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்லவா:-)

Anonymous said...

very nice

சரவணன் said...

Thank you Radha. But you ain't seen nothin' yet :-))